வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை யாழ். மாவட்ட அரச அதிபர் பார்வையிட்டார்!

யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட அரச அதிபர் க.மகேசன் நேரடியாக இன்று பார்வையிட்டார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் மழையுடனான காலநிலை நீடித்து வரும் நிலையிலே பல பகுதிகள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்லுண்டாய், நாவாந்துறை, அச்சுவேலி போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்த அரச அதிபர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

Leave a Reply