‘நெஞ்சில் பூத்த நெருப்பு’ கவிதை நூல் வெளியீட்டு விழா

கவிஞர் பல்துறை கலைஞர் அபிநய நாயகர் என்.எம். அலிக்கான் எழுதிய ‘நெஞ்சில் பூத்த நெருப்பு’ கவிதை நூல் வெளியீட்டு விழா, நேற்று மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வு, அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில் மாளிகைக்காடு பாபா றோயலி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (30) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் முஸ்லிம் விவகார தேசிய இணைப்பாளரும், பிரபல அரசியல் சமூக செயற்பாட்டாளருமான சிராஸ் ஜுனூஸ்சட்டமொழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளராக இருந்த இலங்கை பொதுசேவை ஆணைக்குழுவின் கௌரவ உறுப்பினர், ஓய்வுபெற்ற சிரேஷ்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பிரபல பாடகர் டைட்டானிக் இசைக்குழுவின் பிரதானிஎம்.எச். றியாஸ்கான் இசைத்தட்டு அறிமுக நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply