கொரோனாத் தொற்றால் மேலும் 18 பேர் நேற்று உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், இலங்கையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13, 743ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, மேலும் 317 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 512,798 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 539,844 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.






