நாட்டின் சில பகுதிகளில், நாளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான 12 மணி நேரத்திற்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
களனி முதுன்கொட நீர்வழிப்பாதையின் திருத்தவேளை காரணமாக, இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில், சியம்பலாபேவத்த, பியகம, தெல்கொட, உடுபில – அனுருமுல்ல, கேரகல, தெமலகம, கதுபொட, தெனடன, பெலஹெல, இந்தொலமுல்ல, தொம்போ, நாரங்வல, வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.






