பாணந்துறை, பல்லியமுல்ல பகுதியில் மருத்துவ சட்டங்களை மீறி மருந்து வில்லைகளை விநியோகித்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரக்கபொல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து, 20,000 இற்கும் அதிகமான சட்டவிரோத மருந்து வில்லைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, மருந்து வில்லைகளை கொள்வனவு செய்ய வருகை தந்திருந்த 15 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை பாணந்துறை வடக்கு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.






