திருகோணமலை, உப்புவெளி பகுதியில் தேவா நகர் பிரதேசத்தில் பாதாள உலக கோஸ்டியுடன் தொடர்புடைய நபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து, கைகுண்டு ஒன்றும் மூன்றடி நீளமாள வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர், சென்ற மாதம் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற கற்பழிப்பு சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என தெரிவித்த உப்புவெளி பொலிஸார் தேவா நகர் பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர் எனவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரையும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.






