விநோத பயணங்கள் அல்லது வேறு அவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்காக, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகவே மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.
மக்கள் சுகாதார சட்டதிட்டங்களைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றவில்லை என்றால், கொரோனா மீண்டும் ஏற்படக்கூடும்.
மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






