செயலாளரை மாற்றுமாறு கோரினார் கல்வியமைச்சர்?

கல்வி அமைச்சின் செயலாளருடன் இணைந்து பணியாற்ற முடியாமல் உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே பதவிக்கு வேறு ஒரு பொருத்தமான நபரை நியமிக்குமாறும் தினேஸ் குணவர்தன, பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பதவிக்காக வேறு ஒரு நபரின் பெயரையும் கல்வியமைச்சர் இதன்போது பிரதமரிடம் பரிந்துரைத்துள்ளார்.

இது தொடர்பில், ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிப்பதோடு, தான் ஜனாதிபதியிடன் கலந்தாலோசிப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கல்வியமைச்சருக்கு பதிலளித்துள்ளதாக குறித்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Leave a Reply