யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில்; ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளும் மிதிவண்டியுமே விபத்தில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 78 வயதுடைய செல்லையா சற்குணநாதன் மற்றும் 27 வயதுடைய கிருஸ்ணகுமார் சுகிந்தன் ஆகிய இருவருமே படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






