வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த அங்கஜன் இராமநாதன்!

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச் சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில், புதிய ஆளுநருக்கு, அங்கஜன் இராமநாதன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகின்றது.

Leave a Reply