இலங்கை இளைஞன் ஒருவர், பெர்முடா விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில், 30 வயதுடைய டிலான் சித்ரானந்த என்ற இலங்கை இளைஞனே உயிரிழந்துள்ளார் என பெர்முடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மாலை 4:10 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
பெர்மூடா வடக்கு கடற்கரை வீதியில், குறித்த இளைஞன் தனது காரை ஓட்டிச் சென்றபோது, மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில், இலங்கை இளைஞன் ஓட்டிய கார் கவிழ்ந்துள்ளது.
இதனால் அவர் அவரது வாகனத்திற்கு அடியில் சிக்கியுள்ளார்.
பெர்முடா தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெர்முடா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.






