இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பிரிவு மற்றும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பிரதேச செயலக பிரிவு ஆகியவற்றுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 9 வரை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கின்றது.

Leave a Reply