<!–
யாழ். மாவட்டத்தில் மழைகாரணமாக காரணமாக 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதுடன் குறித்த மழையுடன் கூடிய நிலையில் தாக்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊரகாவற்துறை, தெல்லிப்பளை, சங்கானை சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் அந்தந்த பிரதேச செயலர் ஊடாக பெறப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






