வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்களின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதனால் இந்த கோரிக்கையை முன்வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் உறுதியான உடன்படிக்கை கைச்சாத்திடப்படாத நிலையில், யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் கவலைப்பட வேண்டாம் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ கட்சித் தலைமைக் கூட்டத்தில் தெளிவுபடுத்திய போதிலும், அரசாங்கத்தை விமர்சிப்பது மிகவும் கீழ்த்தரமானதும் அசிங்கமானதுமான செயலாகும்.
இவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்கின்றார்கள் என்ற சந்தேகம் பலருக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.






