மருதமுனை, பெரியநீலாவணை பகுதியில் நேற்று மாலை வாய்க்கால் நீரில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
பெரியநீலாவணை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சுலைமான் லெப்பை சராப்கான் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞன் தனது நண்பர்களுடன்;, மத்திய முகாம் பிரதேசத்திலுள்ள வாய்க்கால் ஒன்றில் நீராடச் சென்றுள்ளார்.
நீருக்குள் சென்றவர் திடீரென நீரில் மூழ்கியதை அவதானித்த நண்பர்கள், அயலவர்களின் உதவியுடன் மீட்டெடுத்து மத்தி முகாம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் இளைஞன் உயிரிழந்தார்.






