
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகொட பகுதியில் நான்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர் என அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பழுதடைந்திருந்த லொறி ஒன்றுடன் கார் மோதி விபத்துக்குள்ளாகியது. காரில் காயமடைந்தவர்களை அழைத்து சென்ற அம்புலன்ஸ் பிறிதொரு கார் மீது மோதியுள்ளது. சிறிது நேரத்தில் மற்றொரு வாகனம் அம்புலன்ஸூடன் மோதி அதே இடத்தில் நான்காவது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கள் காரணமாக கொழும்பு நோக்கிய பாதையில் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





