வன மூடுகையின்றி உள்ளது யாழ்ப்பாணமும், கொழும்பும்!

இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய மாவட்டங்களே வன மூடுகையின்றி, காடுகள் இன்றி காணப்படுகின்றன.

எனவே, நவம்பர் மரநடுகை மாதத்தை முன்னிட்டு வன மூடுகை செயற்றிட்டம் இந்தமாதத்தில் நடைபெறவுள்ளது என்று யாழ். வனபரிபாலன திணைக்களத்தின் வனவிரிவாக்கல் உத்தியோகத்தர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
ஆகவே, வனமூடுகைகையை ஏற்படுத்தும் நோக்குடன் மரநடுகை மாதத்தை முன்னிட்டு வனபரிபாலன திணைக்களத்தால் இந்தமாதம் வன மூடுகை மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் மரநடுகை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த வகையில் சண்டிலிப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை, வியாபாரி மூலை, நாவாந்துறை ஆகிய பகுதிகளிலே வனபரிபாலன திணைக்களத்தில் மரநடுகை முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க ஆளுநர் மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளிலும் மரநடுகை செயற்றிட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. – என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply