விமான நிலைத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டவர்!

டுபாய் நாட்டில் இருந்து இலங்கை வந்த கென்ய பிரஜை ஒருவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

39 வயதான கென்ய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொக்கேய்ன் போதைப்பொருளை உடமையில் வைத்துள்ளார் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, 17 கொக்கேய்ன் போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கிய நிலையில், பரிசோதித்த பின்னர் 8 கொக்கேய்ன் உருண்டைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.

அதனையடுத்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஏனைய 11 உருண்டைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

இவரை மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் பொலிஸார் கையளித்துள்ளனர்.

Leave a Reply