48 மணி நேரங்களுக்கு மின் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படலாம்! மின்சார சபை

நாடு முழுவதும் உள்ள மின்சார சபை ஊழியர்கள் நவம்பர் 03 ஆம் திகதி கொழும்பில் ஒன்றுகூடி பெரும் போராட்டத்தை நடத்தவுள்ள நிலையில், நாட்டில் 48 மணி நேரங்களுக்கு மின் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படலாம் என மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

எனினும், மின்சார விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் வேண்டுமென்ற பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க நாங்கள் விரும்பவில்லை.

ஆனால், ஏதேனும் காரணங்களால் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரி செய்ய போராட்ட காலப்பகுதியில் கிட்டத்தட்ட 48 மணிநேரங்களுக்கு ஊழியர்கள் யாரும் வரமாட்டார்கள் என இலங்கை தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை கொழும்பில் ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், நவம்பர் 3 ஆம் திகதி நாங்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை மின்சார சபை மற்றும் துறைமுக அதிகார சபையின் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்காக அவர்கள் நாடு முழுவதும் இருந்து வருவார்கள்.

இந்நிலையில், மின் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்பட்டால் அதனைச் சரி செய்ய யாரும் இருக்க மாட்டர்கள்.

இவ்வாறான போராட்டத்தால் கெரவலப்பிட்டி, யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறீர்களா எனக் கேட்டபோது,

அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிடும்போது அரசாங்கம் நிச்சயமாக அதற்குச் செவிசாய்த்தே ஆக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply