ஒரு நாடு ஒரே சட்டம் செயலணியின் சட்டவரைவில் பொதுபல சேனாவின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் – ஞானசாரர்

ஒரு நாடு, ஒரே சட்டம் செயலணியினால் தயாரிக்கப்படும் சட்டவரைவில் பொதுபல சேனா அமைப்பின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் என குறித்த செயலணியின் தலைவரும் குறித்த அமைப்பின் செயலாளருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பொதுபல சேனா அமைப்பு எழுப்பிய பிரச்சினைகள் இன்றும் அவதானிக்கப்பட வேண்டியவையாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, பொதுபல சேனா எழுப்பிய மற்றும் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் செயலணியால் விவாதிக்கப்பட்டு குறித்த நட்ட வரைவில் இணைத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து செயலணிக்கு நன்கு தெரியும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பிரிந்து செல்வதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply