
யாழ்.தொழில்நுட்பவியல் கல்லூரியின் குறுகிய கால கற்கை நெறிகளுக்கான இறுதிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குடிசார் எந்திரவியல், பொறிமுறை பொறியியல், மின் பொறியியல், கனிய அளவையியல் ஆகிய பாட நெறிகளை இதுவரை பூர்த்தி செய்யாத மாணவர்களுக்காக மீண்டும் இந்தப் பரீட்சையை நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
இந்தப் பரீட்சைக்குத் தோற்ற விரும்புபவர்கள் யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் பரீட்சைப் பிரிவுடன் தொடர்பு கொண்டு தமது விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.





