ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் இரால் பாலத்தின் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தோப்பூர் – சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த தவகுமார் ரதுசன் (வயது 18) உயிரிழந்ததாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவன் தனது நண்பர்களோடு இரால் பாலத்தில் குளித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா சென்று பார்வையிட்டார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாளை திங்கட்கிழமை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டார் .

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply