ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் சட்டவரைபில் பொதுபல சேனாவின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும்! ஞானசாரர்

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியால் தயாரிக்கப்படும் சட்டவரைபில் பொதுபல சேனா அமைப்பின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் என குறித்த செயலணியின் தலைவரும் குறித்த அமைப்பின் செயலாளருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் பொதுபல சேனா அமைப்பு எழுப்பிய பிரச்சினைகள் இன்றும் அவதானிக்கப்பட வேண்டியவையாக உள்ளன.

இதன் விளைவாக, பொதுபல சேனா எழுப்பிய மற்றும் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் செயலணியால் விவாதிக்கப்பட்டு குறித்த சட்ட வரைபில் இணைத்துக்கொள்ளப்படும்.

இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து செயலணிக்கு நன்கு தெரியும். பிரிந்து செல்வதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply