மன்னார் மாவட்ட த்தின் தற்போதைய கொரோனா நிலவரம்

மன்னார் மாவட்டத்தில், இவ்வருடம் மாத்திரம் 2376 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று (31) வரை 273 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இன்று (01) விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்று, மேலும் புதிதாக 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை 273 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னாரில், இதுவரையில் 23 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதோடு, 2,393 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த மாதம் 431 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply