ஹப்புத்தளையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடொன்று சேதம்!

பதுளை, ஹப்புத்தளை ரயில் வீதி பகுதியில், வீடொன்றின் மீது இன்று காலை மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அனர்த்தம் இடம்பெறும்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியுள்ளதால், எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவர்களது உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply