ஹொரவப்பொத்தானை, மொரவௌ பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 காட் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரவௌ மற்றும் ராஜாங்கனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜாங்கனையைச் சேர்ந்த சந்தேகநபர், கடந்த 30 ஆம் திகதி மாலை மொரவௌ பிரதேசத்தில் உள்ள சந்தேகநபரின் இல்லத்திற்குப் போதைப்பொருளைக் கொண்டு வந்துள்ளார்.
பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காகப் போதைப்பொருள்களைக் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை, கெப்பித்திக்கொல்லாவ நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






