காலி, ஊருகஸ்மங்சந்தி, கருவலகொட பிரதேசத்தில், இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதலில், ஒருவர் உயிரிழந்தார்.
அத்துடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் இன்று பகல்; தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் மடக்கும்புர, கரன்தெனிய பிரதேசத்தை சேரந்த 51 வயது நபரே உயிரிழந்தார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர், துப்பாக்கியுடன் மற்றுமொருவரை அழைத்துக்கொண்டு களுவலகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு சென்று துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளர்.
இந்த சம்பவத்தில், குறித்த வீட்டிலிருந்த பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டிலிருந்த நபர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் மீதும் அவருடன் சென்ற நபர் மீதும் கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதன்போதே, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் உயிரிழந்தார்.
தாக்குதலுடன் தொடர்புடைய நபரை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






