இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாகவும், அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தலைமையில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெறுகின்றது.
இக் கலந்துரையாடல் தற்போது கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.
இக் கலந்துரையாடலில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகிய வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் என்.வி.சுப்பிரமணியம், வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் உப தலைவர் ஜெ.பிரான்சிஸ், வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பொருளாளர் ஏ.மரியராசா, வடக்கு கிழக்கு தேசிய மீனவர் நல்லிணக்க இணைப்பாளர் அன்ரனி யேசுதாஸன், முல்லைத்தீவு அண்னை வேளாங்கண்ணி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் வி.அருள்நாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.







