
திரையுலகில் ஒளிப்பதிவாளராக இருந்து அதன் பின்னர் சிறுத்தை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிறுத்தை சிவா.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கினார். இந்த நான்கு படங்களில் தல அஜித் தான் ஹீரோவாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இந்தப் படம் தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
தற்போது இந்த படத்திற்காக சிறுத்தை சிவா ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பக்கா கிராமத்து கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பஞ்சாயத்து தலைவராக அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார்.
அவருக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





