வடக்கில் கொரோனாப் பாதிப்பு முழு விவரம்!

வடக்கு மாகாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், ஒக்டோபர் மாதத்தில் 2,612 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியதுடன், 71 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒக்டோபரில் யாழ் மாவட்டத்தில் 44 பேரும் வவுனியா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்தனர்.

வடக்கு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 74 பேர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 865 பேரும், வவுனியா மாவட்டத்தில் 703 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 654 பேரும், மன்னார் மாவட்டத்தில் 273 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 117 பேரும், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பபாணம் மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும், கிளிநொச்சியில் 9 பேரும், முல்லைத்தீவில் 4 பேரும் என 71 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 2020 மார்ச் தொடக்கம் நேற்று வரை வடக்கு மாகாணத்தில் 833 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply