நாட்டில் கொரோனாத் தொற்று நோயாளர் தொகை மற்றும் கொரோனா உயிரிழப்புக்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமையின் பின், பொதுமக்களின் நடத்தையின் விளைவுகளை இன்னும் 2 முதல் 3 வாரங்களில் அறிந்துகொள்ள முடியும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
மேலும், நாட்டில் தொற்றுநோய் ஆபத்து விலகிவிட்டதாக யாரும் கருதக் கூடாது.
தொற்று நோயாளர்களைக் கண்டறியும் வகையில் நாட்டில் எழுமாற்றான பி.சி.ஆர். பிரிசோதனைகளை அதிகரிக்குமாறும் கண்காணிப்புக்களைத் தீவிரப்படுத்துமாறும் சுகாதார அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகும்.
அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் வரை, பாடசாலைகளை தொடங்குவதற்கு காத்திருப்பது தீர்வாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






