இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், மீனவர் சங்கப் பிரதிநிதிகளிற்கும் இடையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் இன்று விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கை கடல் பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்து மீறும் இந்திய மீனவர்கள் விடயம் தொடர்பில் இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகிய வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் என்.வி.சுப்பிரமணியம், வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் உப தலைவர் ஜெ.பிரான்சிஸ், வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பொருளாளர் ஏ.மரியராசா, வடக்கு கிழக்கு தேசிய மீனவர் நல்லிணக்க இணைப்பாளர் அன்ரனி யேசுதாஸன், முல்லைத்தீவு அண்னை வேளாங்கண்ணி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் வி.அருள்நாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.







