முல்லைத்தீவில் வயலுக்கு சென்ற விவசாயி சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, ஆண்டான்குளம் பகுதியில் விவசாய நடவடிக்கைக்காக வயலுக்குச் சென்ற விவசாயி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

பூதன்வயல் முள்ளியவளையைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான, வேலாயுதம் ரவிச்சந்திரன் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த விவசாயி பாம்பு தீண்டி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சடலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply