வடக்கு மாகாணத்திற்கான மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதாரத் தரப்பினர், படைத்தரப்பினர் உட்பட்ட முன்களச் செயற்பாட்டாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும். அதன் தொடராக நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு செலுத்தப்படும்.
இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






