ரஜரட்ட பிரதேச நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பல இடங்களிலும் உள்ள நீர்த்தேக்கங்ளின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ரஜரட்ட பிரதேசத்தில், பெரும்பாலான சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நீர்த்தேக்கங்கள் நிறைந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மழை காரணமாக கலாவெவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் கல்நேவ, ஹிரிப்பிட்டியாகம மற்றும் அவ்கன வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனால் நீர்த்தேக்கத்தின் தாழ்நில பகுதியில் வாழ்ந்து வருவோர் அவதானத்துடன் செயல்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.

Leave a Reply