இருவேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்

ஆண்டான்குளம் பகுதியில் இருந்து நபரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – ஆண்டான்குளம் பகுதியில் விவசாய நடவடிக்கைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் ரவிச்சந்திரன் என்ற விவசாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பூதன்வயல் முள்ளியவளையினை சேர்ந்த என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு மரண விசாரணைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பதுளை வீதியை அண்டிய பகுதிக்குள் உள் நுழைந்த காட்டு யானையால் விவசாயியான வயோதிபர் ஒருவர் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில்இ 60 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் தாமோதரம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

Leave a Reply