கதிர்காமம் முருகன் கோயிலில், நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட சுமார் 38 பவுண் எடையுடைய தங்கத் தகடு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இரு வாரங்களுக்கு முன்னரே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கதிர்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சி.ஐ.டி. விசாரணையும் ஆரம்பமாகியுள்ளது.
சி.சி.ரி.வி. காட்சிகள் உட்பட மேலும் சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் பல கோணங்களில் இடம்பெற்று வருகின்றன.






