தொடரும் மதவெறித் தாக்குதல்: மன்னாரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் சிலை மீண்டும் மாயம்

10 மாதங்களிற்கு முதல் காணாமல் ஆக்கப்பட்டு கடந்த மாதம் 7 ஆம் திகதி உருத்திர சேனையால் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்ட மன்னார் முசனி பிரதேச பாசித்தென்றல் குளத்தடியில் அமர்ந்திருந்த 100 வருட வரலாற்றை உடைய பிள்ளையார் நேற்று முன்தினம் இரவு
முதல் மீண்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இங்கு இருந்த பிள்ளையார் சிலை விசமிகளினால் உடைத்து எறியப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கடந்த மாதம் 7 ஆம் திகதி பிள்ளையார் திருவுருவம் பிஸ்ரதிஷ்டை செய்யப்பட்டது.

சில நாட்களிற்கு முதலும் மன்னார் மடுவில் பிள்ளையாரை உடைத்து பிள்ளையார் கோவிலில் அந்தோனியாரை விசமிகள் நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருவேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்

Leave a Reply