அலவ்வ பிரதேச சபையின் புதிய தவிசாளர் பிரதமர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

<!–

அலவ்வ பிரதேச சபையின் புதிய தவிசாளர் பிரதமர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்! – Athavan News

அலவ்வ பிரதேச சபையின் தவிசாளராக  பத்மா வேத்தாவ அவர்கள்  நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவராக சேவையாற்றிய பத்மா வேத்தாவ அவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆரம்பம் முதல் அதன் மகளிர் அமைப்பின் ஆர்வலராக செயற்பட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில்  அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும்  வேத்தாவ அவர்களின் கணவரான கலைஞர் பந்துல விஜேவீர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply