எதிர்காலத்தில் தங்களது கட்சிக்கு கிடைக்கும் வெற்றியின் ஊடாக மக்களுக்கு மேலும் பல சேவைகளை வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையை வெல்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதற்காக, ஆதரவாளர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்தோடு, கட்சியை கட்டியெழுப்புவதற்கு உதவி புரிந்த கட்சியின் உள்ளேயும், வெளியேயும் இருக்கும் அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.






