யாழ்ப்பாணம், கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் முயற்சி எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை, நகுலேஸ்வரம் ஜே.226 கிராமசேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இன்று இடம்பெறவிருந்தன.
இருப்பினும், அங்கு கூடிய காணி உரிமையாளர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பை அடுத்து அந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.







