கம்பளை, வெட்டகேதெனிய பகுதியில் வீட்டுத் தோட்டம் என்ற போர்வையில் கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறுந்துவத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
மேலும், மரக்கறி மற்றும் தேயிலை செடிகளுக்கு மத்தியிலேயே கஞ்சா செடிகளும் வளர்க்கப்பட்டுள்ளது. சுமார் 4 அடி நீளமான இரு கஞ்சா செடிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
ஐகதானவரை, நீதிமன்றதில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குறுந்துவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






