கடும் மழை காரணமாக இடிந்து விழுந்த சிற்றாலயம்

மன்னாரில் பெய்த கடும் மழை காரணமாக சிற்றாலயம் ஒன்று முழுமையாக சேதம் அடைந்துள்ளது

மன்னார் மாவட்டத்தில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக, பல கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலையில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் பெய்த கடும் மழையில் மன்னார் சாந்திபுரம் பகுதியில் உள்ள சிற்றாலயம் முழுமையாக சேதம் அடைந்து,கூரை பகுதி இடிந்து ஆலயத்தினுள் வீழ்ந்துள்ளது

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனாலும் சிற்றாலையத்தை சூழ்ந்து நீர் நிறைந்துள்ளமையினாலும் சிதைவுகளை அகற்ற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது

Leave a Reply