குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து விமல், கம்மன்பில அரசாங்கத்தில் இருந்து விலகுங்கள்! சனத் நிஸாந்த

அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து, அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், குறித்த இருவரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேறொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெற்றுக்கொள்ளும் குறித்த இருவரும், அரசாங்கத்தை விமர்சிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அத்தோடு, குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு பதிலாக, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இந்த விடயத்தில் ஒரு யதார்த்தமான அணுகுமுறையை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகளின் ஒன்று கூடலை தமிழரசுக் கட்சி புறக்கணிக்கவில்லை! மாவை விளக்கம்

Leave a Reply