
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவுக்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
தனது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து குறித்த ஆசிரியர் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே அவருக்கு தொற்றுள்ளமை நேற்று உறுதிசெய்யப்பட்டது.
அவரை சுய தனிமைப்படுத்துவதற்கும், அவருடன் தொடர்புடையவர்களை இனங்காண்பதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தரம் 5 வரையான பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு சென்று தரம் 1 மாணவர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.





