வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் போராட்டத்தில்!

<!–

வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் போராட்டத்தில்! – Athavan News

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அலுவலக தேவைக்கு வைக்கப்பட்டிருந்த எரிபொருளை புதுக்குடியிருப்பு பொலிஸார் எடுத்துச்சென்று பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து, வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை நிர்வாக சேவை சங்கம் பிரதேச செயலகங்களில் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் இந்த கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணிநேரம்வரை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது அலுவலக பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply