கிளிநொச்சியில் போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு!

கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்ட இடமொன்று சுற்றிவளைப்பட்டதில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சுற்றிவளைப்பின்போது, போலியான 15 முன் இலக்கத் தகடுகளும், 28 பின் இலக்கத் தகடுகளும், அரச முத்திரையுடன் கூடிய 363 ஸ்டிக்கர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

உதயநகர் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், சந்தேகநபர் இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply