பதுளை, கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில், மண்ணெண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
இந்நிலையில், பிரதேச மக்கள் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை முதல் நீண்டவரிசையில் காத்திருந்துள்ளனர்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு, கொழும்பிலிருந்து குறைந்தளவிலேயே மண்ணெணய் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிடைக்கப்பெறும் மண்ணெண்ணெயில் தலா 5 லீற்றர் மண்ணெண்ணையே நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுவதாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.






