கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 22,771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் ஒக்டோபர் மாதத்தில் 68 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், இதுவரை 10 மாத காலப்பகுதியில் நாட்டை வந்தடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60,000 ஐக் கடந்துள்ளதுடன் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்தே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதனடிப்படையில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 18,466 பேர் வந்துள்ளனர்.
அத்துடன், ஜெர்மனி, ஐக்கிய அரபு இராச்சியம், மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகளும் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.






