
நிரந்தர நியமனத்தை முழுமையாக வழங்கக் கோரி, வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றும் 970 பேரில் 349 பேருக்கு அவர்களது சேவை கால அடிப்படையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. ஏனையோருக்கு நியமனம் வழங்கப்படவில்லை.
இவ்வாறு நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“349 பேருக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள போதும், அவர்களுக்கான நியமனம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே வடக்கு மாகாணத்தில் உள்ள 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தற்போதைய புதிய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.





